ஆவணங்கள் இல்லாத 1,101 வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூர், டிச 22 – கோலாலம்பூரில் Jalan Silang மற்றும் Kota Raya பகுதியில் போலீஸ் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 1.101 பேர் கைது செய்யப்பட்டனர். ஆவணங்களை கொண்டிருக்காத காரணத்தினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்ர். புக்கிட் அமானின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு பிரிவின் தலைமையில் அந்த கூட்டு போலீஸ் நடவடிக்கை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் கமிஷனர் அலாவ்டின் அப்துல் மஜித் கூறினார். 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

இரு பிள்ளைகள் உடபட முறையான பயண ஆவணங்களை கொண்டிருக்காத 1,101 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அலாவ்டின் Alaudeen கூறினார். ஆவணங்கள் இல்லாத பலர் தப்பியோட முயன்றனர். Jalan Silang மற்றும் கோத்தா ராயா பகுதி சுற்றி வளைக்கப்பட்டதால் அவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் மேல் நடடிக்கைக்காக பின்னர் குடிநுழைவுத்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என Alaudeen தெரிவித்தார்