பிளஸ் நெடுஞ்சாலையில் விரைவு பஸ்சில் 115.7 கிலோ போதைப் பொருள் பறிமுதல் நால்வர் கைது

ஷா ஆலம், டிச 20 – இரண்டு நாட்களுக்கு முன் பிளஸ் நெடுஞ்சாலையில் விரைவு பஸ்ஸில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 20 பொட்டலங்களில் இருந்து 115. 7 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் நால்வர் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் தலைவர் டத்தோ சசிகலா தேவி சுப்ரமணியம் தெரிவித்தார். டிசம்பர் 18 ஆம் தேதி , சுமார் இரவு 11.55 மணியளவில், சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு, கோலாலம்பூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அருகே பிளஸ் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நான்கு உள்ளூர் ஆண்களை கைது செய்ததாக அவர் கூறினார்.

“நிசான் அல்மேரா காரின் உள்ளே நடத்தப்பட்ட சோதனையில், 10.3 கிலோ எடையுள்ள மரிஜுவானா என நம்பப்படும் 10 பார்சல்கள் அடங்கிய ஒரு பெட்டியில் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சந்தேக நபர்களில் ஒருவர் சோதனைக் குழுவை அருகில் நிறுத்தப்பட்டிருந்த விரைவுப் பேருந்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் போலீஸார் மேலும் ஐந்து பெட்டிகளைக் கைப்பற்றினர், ஒவ்வொன்றும் சுமார் 105 கிலோ எடையுள்ள மரிஜுவானா என்று சந்தேகிக்கப்படும் சுமார் 20 சுருக்கப்பட்ட காய்ந்த இலைகளைக் கொண்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் RM358,899 என சசிகலா தேவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.