மலேசியாவின் ரொட்டி சானாய்க்கு கிடைத்த பெருமை

கோலாலாம்பூர், டிச 20 -உலகின் சிறந்த உணவு என்ற பட்டியலில் மலேசியாவின் ரொட்டி சானாய்க்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது
உலகின் சிறந்த 100 உணவுகளுக்காக விருதுகளில் மலேசியாவின் அனைத்து இன மக்களும் அதிகம் விரும்பு உடகொள்ளும் உணவான ரொடடி சானாய் இடம் பெற்றுள்ளது மலேசியர்களுக்கும் மலேசியாவுக்கும் கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.

கோதுமை மாவு, தண்ணீர், முட்டை, வாழைப்பழம் , வெங்காயம் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ரொட்டி சானாய் மலேசியாவில் காலை நேரம், மாலை மற்றும் இரவு நேரங்களிலும் அதிகமானோர் விரும்பும் உணவாக கருதப்படுகிறது. சாம்பர் மற்றும் சம்பாலுடன் அதனை உட்கொள்வதே தனி சுகம் என மலேசியர்கள் கருகின்றனர். மலேசியாவுக்கு வரும் சுற்றுப்பயணிகளும் ரொட்டி சானாயை விரும்பி உட்கொள்கின்றனர்.