விரைவில் அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம்

கோலாலம்பூர், டிச 1 – விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை மாற்றத்தில் புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் அண்மையில் வெளியாகியது. சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து டாக்டர் Zaliha Mustafa’s பதிலாக புதிதாக ஒருவர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது . புதிய சுகாதார அமைச்சராக Fadhlina Sidek நியமிக்கப்படலாம் எனறு தகவல்கள் வெள்ளிக்கிழமை இணைய பதிவேடுகளில் வெளியானது. அதோடு கல்வி அமைச்சராக நிக் நஸ்மி நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் Salahuddin Ayub காலமானதை தொடர்ந்து உள்நாடு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் பதவி காலியாக இருந்து வருகிறது. அப்பதவிக்கு ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசோப் sof நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.